தமிழ் ஆட்சி மொழி சட்டவாரம் – கல்லூரி மாணவர்கள் பேரணி.

தமிழ் ஆட்சி மொழி சட்டவாரத்தை முன்னிட்டு கோவையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் 18ம் தேதி முதல் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்திலும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தொடர்ந்து பல்வேறு பள்ளி கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து டவுன்ஹால் பகுதி வரை இந்த பேரணி நடைபெற்றது.  

இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். மேலும் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்த சில மாணவ மாணவிகள் அவர்களது முகத்தில் “தமிழ்” என்ற வார்த்தையையும் பாரதியார் படத்தையும் வரைந்திருந்தனர்.

Loading