தனிஷ்க் ஜூவல்லரி தனது புதுப்பக்கப்பட்ட புதிய கிளையை  கோவை ஆர்.எஸ்.புரத்தில் துவங்கியது.

இந்தியாவில் நகை ஆபரணங்கள் விரும்புவர்களிடையே  தனிஷ்க் நிறுவனத்தின்  நகை பிராண்ட்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.. இந்தியப் பெண்களின் நகைத் தேவைகள்  மற்றும் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு நகைத்தொகுப்புகளை வழங்குவதில் அதிக கவனத்துடன் விற்பனை செய்து வரும் தனிஷக் நிறுவனம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட தனது பிரம்மாண்ட விற்பனை மைய  கிளையை துவங்கி உள்ளது. சுமார் 5000 சதுர அடியில்,தனது மாபெரும் வெள்ளி விழா ஆண்டில்  பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்டிருக்கும்  தனிஷ்க்  நிலைய துவக்க விழாவில், தனிஷ்க் மெர்ச்சண்டைசிங் பிரிவு பொது மேலாளர்  சுனில் கலந்து கொண்டு புதிய விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். 

திறப்பு விழாவை முன்னிட்டு  அசத்தல் சலுகையாக மார்ச் 8 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள்   வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகை வாங்கும் போதும் தங்க நாணயங்களை இலவசமாகப் பெறலாம்..புதிய விற்பனை மையத்தில்,, ஜொலிக்கும் தங்கம். பிரமிக்க வைக்கும் வைரங்கள், துடிப்பான ரத்தினக் கற்கள் நுணுக்கமான வேலைப்பாடுகள் மிக்க குந்தன் மற்றும் போல்கி போன்ற கண்கவர் ஆபரணங்கள், . பெண்களால் அதிகம் விரும்பப்படும் மிளிரும் மோதிரங்கள், காதணிகள் முதல் பதக்கங்கள், நெக்லஸ்கள், வளையல்கள் மற்றும் ப்ரேஸ்லெட்கள் வரை பலவிதமான ஃபேஷன் டிசைன்கள் இங்கு உள்ளன.

மேலும், இந்த விற்பனை நிலையத்தில் நவீன. சமகால மற்றும் மெல்லிய எடையிலான நகைகளின் தொகுப்பு ‘ஸ்ட்ரிங் இட்’ மற்றும் தனிஷ்க்கின் பிரத்தியேக திருமண ஆபரண துணை ப்ராண்டான ‘ரிவா’  நகைத்தொகுப்புகள்   இடம்பெற்று உள்ளன. துவக்க விழாவில் தனிஷ்க் நிறுவனத்தின் ஏரியா பிஸினெஸ் மேனேஜர் சிவரஞ்சனி இளங்கோவன்,சர்க்கிள் பிசினஸ் மேனேஜர் சந்திரசேகர், பிசினஸ் அசோசியேட் நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading