மாநகராட்சி பகுதியில் வேகத்தடை அமைக்க முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்.

கோவை கொடிசியா பகுதியில் வெள்ளை கோடுகள் குறிப்பிடாத வேகத்தடையால் தடுமாறி விழுந்து சந்திரகாந்த் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. இது குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநகராட்சி ஆணையர்(பொறுப்பு) செல்வசுரபி, “கோயமுத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடை அமைப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். 

அதன் பின்னர் மாநகராட்சி நிர்வாகம் வேகத்தடை அமைப்பதற்கு உரிய சாத்திய கூறுகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து , உரிய சாத்தியக்கூறுகள் இருப்பின் மாநகராட்சி நிர்வாகமே வேகத்தடையை அமைத்து தரும். எனவே பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக நிறுவனத்தினர், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் , உள்ளிட்டோர் தாமாகவே வேகத்தடையை அமைக்க கூடாது . தனியார் எவரேனும்  வேகத் தடை அமைத்தால் அவர்கள் மீது சட்டப்படி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”  என அறிவித்துள்ளார்.

Loading