தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய கோவை மாநகராட்சி.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்த அதிக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளை பொதுமக்கள் தங்கள் உடமைகளை இழந்து இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழலில் மாநிலம் முழுவதிலும் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஏற்பாட்டின் பேரில் 30 முட்டை அரிசி, ரொட்டி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் கடலை மிட்டாய் சிப்ஸ் ஆகியவை உள்ளடக்கிய 15 ஆயிரம் பேருக்கான நிவாரண பொருட்கள் மற்றும் ஆயிரம் கிலோ கார வகைகள், 500 கிலோ இனிப்பு வகைகள் தலையணைகள் மற்றும் 16000 குடிநீர் பாட்டில்கள்  ஆகியவையும் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading