இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், 66 வது வார்டு புலியகுளம் பகுதியிலுள்ள ஆசியாவின் பெரிய விநாயகரை தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து புலியகுளம் பகுதியிலுள்ள தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், புலியகுளம் தேவாலயம், ஏரிமேடு அம்மன் குளம், 64 வது வார்டு பெரியார் நகர், 63 வது வார்டு 80 அடி சாலை, ஒலம்பஸ், பெருமாள் கோவில் மைதானம், திருவள்ளுவர் நகர், டிரினிட்டி சர்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
புனித வெள்ளியையொட்டி தேவாலயத்திற்கு வந்தவர்களிடம் வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வீடு வீடாக சென்று, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக அரசு செய்த சாதனைகள் மற்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறினார்.
இந்த வாக்குசேகரிப்பின்போது, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், திமுக பகுதிக்கழக செயலாளர்கள் பசுபதி, நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply