பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் ஏற்றபட்ட கார்த்திகை மகா தீபம்.

கார்த்திகை தீப ஒளித்திருநாள் இன்று  அனைவராலும் கொண்டாடபட்டது. அவரவர் வீடுகளில் செம்மண்ணால் செய்யபட்ட அகல் விளக்குகளில் நல்லெண்ண ஊற்றி திரியிட்டு தீபமேற்றினர். குறிப்பாக வீட்டு முற்றம், வாசல், மற்றும் ஜன்னல்களில் விளக்கு வைத்து தீபமேற்றி கொண்டாடினர். இதேபோல் கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தீபமேற்றி வழிபட்டனர். இன்னிலையில் கோவை மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் ஏழாவது மலையில் தீபமேற்றி வழிபடுவது வழக்கம் குறிப்பாக செம்மேடு பகுதி மக்கள் பூண்டியிலிருந்து கிரிவலம் சென்று கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் தீபமேற்றி வந்தனர். இன்னிலையில் அப்பகுதி மக்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர்.

இதன் காரணமாக வனத்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபமேற்ற தடை விதித்திருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் கடந்த 9ம் தேதி சென்னை உயர் நீதி மன்றம் செம்மேடு பகுதியை சேர்ந்த மக்கள் வெள்ளியங்கிரி மலையில் தீபமேற்றி வழிபட அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து இன்று கார்த்திகை தீப ஒளித்திருநாளில் வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கு செல்லும் வழியில் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள பூண்டி ஆண்டவர் கோவிலில் 500லிட்டர் நெய், 450மீட்டர் காடா துணியை கொண்டு கொப்பரை அமைத்து தீபமேற்றி வழிபட்டனர். முன்னதாக வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு யாகம் வளர்ககபட்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. இதனையடுத்து சிவபக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  சிவபெருமானுக்கு கைலாய வாத்தியம் இசைத்து தீபமேற்றபட்டது.

இதனையடுத்து பக்தர்கள் அரோகரா! அரோகரா!  என மகா தீபத்தை வழிபட்டனர். இது தொடர்பாக பேசிய ஈஸ்வரமூர்த்தி கடந்த 3 ஆண்டுகளாக வனத்துறையும், இந்து அறநிலையத்துறையும் தீபமேற்ற அனுமதி மறுத்ததையடுத்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் இவ்வழக்கில் தற்போது சென்னை உயர் நீதி மன்ற ஆணை பெற்று இன்று தீபமேற்றபட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக அனுமதி மறுக்கபட்டதையடுத்து வெள்ளியங்கிரி மலை அடிவாரப்பகுதியான பூண்டி கோவிலில் தீபமேற்றி வந்ததாகவும் இந்த ஆண்டும் நிதி மன்ற அனுமதியை பெற்றுள்ளோம் தற்போது வெள்ளியங்கிரி சுயம்பு லிங்கம் அமைந்துள்ள ஏழாவது மலையில் மழை காரணமாக செலமுடியாத நிலையில் அடிவாரத்தில் தீபமேற்றியுள்ளதாக தெரிவித்தவர் அடுத்த ஆண்டு முதல் ஏழாவது மலையில் தீபமேற்றி வழபடுவேம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Loading