பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் “முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளான காலமுறை ஊதியம் குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலியிடங்களை பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும் தகுதி வாய்ந்த பத்தாம் வகுப்பு தேறிய சமையலர் உதவியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் 10 ஆண்டுகள் பணி முடிந்திருந்தால் அமைப்பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் இது பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்திய நிலையில் கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை” என பல்வேறு வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

Loading