பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் நோயாளிகளுக்கு பாதிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஆணைகள் பிறப்பிக்கும் வரை போராட்டத்தை தொடர்வது என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்தனர்.
மதுரை சுகாதார அலுவலரின் பணியிடை நீக்கம்,மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமை, மகப்பேறு மரண தணிக்கை பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவிசங்கர், மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தது குறித்து முதன்மை சுகாதார அலுவலர் அத்துமீறி உள்ளே நுழைந்து இது சம்பந்தமாக மருத்துவர்களை மிரட்டி உள்ளார். மதுரை முதன்மை சுகாதார அலுவலர் மீது மருத்துவமனை நிர்வாகமும்,சுகாதாரத் துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
முதன்மை சுகாதார அலுவலர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தெரிவித்தார். மேலும் அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 6 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும்.ஆனால் 2 மருத்துவர்கள் வைத்து இரவு பகலாக வேலை வாங்குவதாக சுகாதார துறை மீது குற்றம் வைத்துள்ளனர்.
மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அதுமட்டுமில்லாமல் மருத்துவத்தை தவிர மற்ற வேலைகளை அரசு இவர்களைச் செய்யச் சொல்லி கட்டாயபடுத்துவதாக குற்றம் சாட்டினார். இதனால் மகப்பேறு மருத்துவர்கள் அதிக அளவில் மன உளைச்சலில் உள்ளதாகவும் 40 மணி நேரம் செய்யக்கூடிய வேலையை 80 மணி நேரமாக செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாக கூறினார். போராட்டங்களுக்குப் பிறகும் உரிய தீர்வு கிடைக்கவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து அக்டோபர் 16-ம் அன்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Leave a Reply