கோவையில் செயல்படும் வாசகம் பவுண்டேஷன் மற்றும் எஸ்.கே.ஸ்போர்ட்ஸ் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தபட்டு வருகிறது. இன்னிலையில் 11ஆண்டாக கோவையில் மாநில அளவில் 14 வயதிற்குட்பட்டோருகான கிளப் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடத்தபட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து 10 கிளப்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன.
லீக் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தபட்டது. இத்தொடரின் இறுதி போட்டியில் கோவை ராமகிருஷ்ணா கிளப் அணியும் திருப்பூர் மாருதி கிளப் அணியும் மோதின முதலில் ஆடிய மாருதி கிளப் அணி 50 ஓவர் முடிவில் 302 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தர்ஷன் 103 ரன்களும், சஞ்சய் 96 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி 44.3 ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து 212 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இதில் அதிகபட்சமாக ராகுல் 104 ரன்களை எடுத்தார். திருப்பூர் மாருதி கிரிக்கெட் கிளப் அணி சார்பாக தர்ஷன் 4 விக்கெட்களை கைப்பற்றினார். வெற்றி பெற்ற அணிக்கு வாசகம் பவுண்டேஷன் நிறுவனர் ஆறுமுகபாண்டி கோப்பையை வழங்கினார்.
Leave a Reply