வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு.

பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கு 3096 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விளக்கம், மாஸ்டர் கவரில் உள்ள முக்கியமான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல், Non Statutory  11 Covers குறித்த விவரங்கள், வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டியவை, Poll  Monitoring System செயலிக் குறித்த விளக்கம் உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. 

இந்நிலையில் நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை கோவை மாவட்ட ஆட்சியரும் கோவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

Loading