2023-24ம் நிதியாண்டில் மாநகராட்சி வரி செலுத்துவதற்கு இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24ம் நிதியாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களையும் செலுத்துவதில், பொதுமக்களின் வசதியினை கருதி மாநகராட்சியின் நாளை 02.03.2024 மற்றும் நாளை மறுநாள் 03.03.2024 ஆகிய தினங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, மேற்கு மண்டலப்பகுதியில் 02.03.2024 மற்றும் 03.03.2024ம் தேதிகளில் வார்டு எண் 35ல் தேவாங்க நகர்-விநாயகர் கோவில் வளாகத்திலும், 03.03.2024 அன்று மட்டும் வார்டு 38ல் சிக்கராயபுரம்- மாரியம்மன் கோவில் வளாகம் மற்றும் வார்டு எண்.75ல் சீரநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்திலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கிழக்கு மண்டலம் வார்டு எண்.7 மற்றும் 8ல் நேருநகர் கிழக்குப் பகுதியிலும், வார்டு 24ல் குருசாமி நகர் பகுதியிலும், வார்டு எண்.56ல் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் மற்றும் வார்டு எண்.57ல் ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியிலும், தெற்கு மண்டலம் வார்டு எண்.90 எம்.ஜி.ஆர் நகரிலும் மற்றும் வார்டு எண்.92ல் பி.கே.புதூர் சித்தி விநாயகர் கோவில் வளாகத்திலும், வடக்கு மண்டலம் வார்டு எண்.பல் ஜனதா நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், வார்டு எண்.15ல் சுப்ரமணியம்பாளையம் அங்கன்வாடி மையத்திலும்,
வார்டு 19ல்மணியகாரன்பாளையம், அம்மா உணவகத்திலும், வார்டு எண்.25ல் காந்திமாநகர் அரசு ஆரம்பப்பள்ளியிலும், வார்டு எண்.28ல் காமதேனு நகர மாநகராட்சி வார்டு அலுவகத்திலும் மத்தியம் மண்டலம் வார்டு எண்.32ல் நாராயணசாமி வீதி-சிறுவர் பூங்காவிலும், வார்டு 62ல் பெருமாள் கோவில் வீதி-மாநகராட்சி வணிக வளாகத்திலும், வார்டு எண்.80ல் கெம்பட்டி காலனி- மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியிலும், வார்டு 84ல் தாக்கத்தில் இஸ்லாம் ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களிலும் இரு தினங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறவுள்ளது. இது தவிர. 31.03.2024 வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் உட்பட அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அனைத்து நாட்களிலும் வரிவசூல் மையங்களும் 8.00மணி முதல் மாலை 5.00 மணிவரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லாயினங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Leave a Reply