கோவையில் இரண்டு மாதகால, வயிற்றுபோக்கு தடுப்பு மூகாம் துவக்கம்.

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 5.8% வயிற்று போக்கினால் ஏற்படுகிறது. நிமோனியாவிற்கு அடுத்தபடியாக இது ஒரு பொது சுகாதார பிரச்சனை ஆகும். நம் நாட்டில் வருடத்திற்கு சுமார் 50000 குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக்கிறார்கள் குழந்தைகளுக்கு பெருபாலும் கோடை மற்றும் பருவ மழை காலங்களில் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கிற்கு மிக முக்கிய காரணங்கள் சுகாதாரமற்ற குழந்தை வளர்ப்புமுறைகள். கை சுத்தம் பேணாமல் இருத்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை. வயிற்றுப்போக்கை தடுக்க பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் ஊட்டுதல், பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு உட்கொள்ளுதல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஓஆர்எஸ் (ORS) மற்றும் ஜிங்க் (ZINC) மாத்திரைகளை வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு தக்க சமயத்தில் அளிப்பதன் மூலம் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இறப்பை தடுக்கலாம். இதனை கருத்தில்கொண்டு தமிழக அரசு “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” நடைபெற திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலும் தவிர்த்தல். இந்த முகமானது ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இரு மாதங்கள் (பதன் மற்றும் ஞாயிறு நீங்கலாக) தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.

அதன் படி முதல் நாள் முகாமை இராமநாதபுரம் துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 3,04,951 ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயனடைய உள்ளார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading