கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அவர்களது குறைகளை கேட்டு அறிந்த வானதி சீனிவாசன், தாய் சேய் சிகிச்சை பிரிவையும் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் கலந்துரையாடினார். இதனை அடுத்து தாய் சேய் சிகிச்சை பிரிவில் பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு வானதி சீனிவாசன் ‘நரேந்திரன்’ என பெயர் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Leave a Reply