வைட்டமின் டி பெறுவதற்கான வாக்கத்தான் போட்டி.

பள்ளி மாணவர்கள் மைதானங்களில விளையாடுவதை விடுத்து மொபைல் போன்களில் கேம்ஸ் விளையாடுவதும், ஆன்லைன் கேம் விளையாடுவதுமாக இருக்கின்றனர். இதனால் உடல் பருமன் அடைந்து சர்க்கரை வியாதி உள்பட பல்வேரு சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது அதிலும் குறிப்பாக வைட்டமின் டி என்பது இயற்கையாகவே சூரிய ஒளியில் கிடைக்ககூடியது. மொபைல் போன் விளையாட்டினால் உடல் உழைப்பு இல்லாமல் வைட்டமின் டி சத்து குறைபாடு உள்ள பள்ளி மாணவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். இன்னிலையில் கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் உடற்கல்வித் துறையில் சார்பில் வைட்டமின் டி சத்தினை பெறுவதற்கான வாக்கத்தான் போட்டி நடைபெற்றது.  

5 வயதுக்குட்பட்டவர், 10 வயதுக்குட்பட்டவர், மற்றும் 16 வயதுக்குட்பட்டவர், என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற வாக்கத்தான் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.இதில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் 9 பேருக்குக் கேடயம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. வாக்கத்தானில் கலந்து கொண்டவர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த வாக்கத்தான் போட்டி காலை 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதில் பள்ளியின் முதல்வர் அஷ்மி மற்றும் பள்ளியின் தலைமைப் பொறுப்பாளர் அபிநயா சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading