கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களில் சிறப்பாக பணியாற்றிய 100 காவலர்களுக்கு விருது வழங்கும் விழா அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதி அரங்கில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று காவல் துறையினருக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆணையர் பாலகிருஷ்ணன், இந்த நிகழ்ச்சி காவலர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளிக்கும் நிகழ்ச்சி என்றார். தற்போது குற்றவாளிகள் செல்போன் பயன்படுத்துவதை விட்டுவிட்டு சமூக ஊடகங்கள் மற்றும் செல்போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு காவல் துறையில் பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
சைபர் க்ரைம் பொருத்தவரை பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி பிடிப்பதால் தாமதம் ஏற்படுவதாகவும் கூறியதுடன் சைபர் கிரைம் பொருத்தவரை 1030 என்ற எண்ணில் குற்றம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் பொதுமக்கள் புகார் அளித்தால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க எளிதாக இருக்கும் எனவும் அறிவுறுத்தினார்.
Leave a Reply