பல ஆண்டுகளாக தண்ணீரை கண்டிராத சின்னவேடம்பட்டி ஏரிக்கு இந்த ஆண்டு தான் கருனை காட்டியது இயற்கை. கோவை ஆனைகட்டி மற்றும் தடாகம் பள்ளத்தாக்கில் பெய்த அதித மழை காரணமாக தடாகம் முதல் சின்னவேடம்பட்டி வரை இருக்கும் அனைத்து சிற்றோடைகள் நிரம்பி, தடுப்பனைகளை கடந்து வெள்ள நீரானது ஆர்பரித்துகொண்டு ராஜவாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டி ஏரியை அடைந்ததை அப்பகுதி மக்களும், விவசாயிகளும், ஏரியை தூர்வாரி களப்பணியாற்றிய சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினரும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 7 வருடங்களாக ஏரிக்கான பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த ஆண்டு அரசு நமக்கு நாமே திட்டம் அடிப்படையில் கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவன நிதி பங்களிப்பில் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டமானது முற்றிலும் தனித்துவமான ஒரு கூட்டு முயற்சியாக அரசு, தனியார் நிறுவனம், தன்னார்வலர்கள் அமைப்பு இணைந்த ஒற்றை புள்ளியில் ஒரு வரலாறு நிகழ்ந்திருக்கிறது. வருடம் தோறும் திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஏரி நீர்நிறைய வேண்டி அமைப்பு மூலமாக கடந்த 4 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்னிலையில் இயற்கை அளித்த வரமாக இந்த வருடம் ஏரிக்கு நீர் வந்தது. இந்த வருடம் 5 வது ஆண்டாக வரலாற்று நிகழ்வாக பல தன்னார்வலர்கள் கலந்து கொண்ட நிகழ்வாக நெகிழ்ச்சியுடன் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீபம் ஏற்றினர். இந்நிகழ்விற்கு தன்னார்வலர்கள் குழந்தைகள் மற்றும் தொடர்ந்து சின்னவேடம்பட்டி ஏரிக்காக கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஒருங்கிணைப்பாளர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Leave a Reply