கோவையில் கடந்த ஏழு ஆண்டுகளாக “தி ஈவன்ட்ஸ் மேனேஜர்ஸ்” சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,திருமண நிகழ்வுகளுக்கான “WEDDING TODAY” எனும் பிரத்யேக கண்காட்சியினை கோவை கொடிசியாவில் துவங்கியது. மூன்றாவது எடிசனாக நடைபெறும் இக்கண்காட்சி செப்டம்பர் 30 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரிக்ஸான், விஸ்வநாதன், அரோமா பொன்னுசாமி, அனிருதன் கிராந்தி, விஜயகுமார், சத்யா, வினோத் கோபால், பழனிசாமி, ராஜூ பல்ராம் பாபு, சஞ்சீவ் கபூர், ராஜ் மெலோடிஸ் ராஜா உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர். இக்கண்காட்சியில் திருமண வைபவங்களுக்கான நகைகள், புத்தாடைகள், இசைக் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், கேட்டரிங் நிறுவனங்கள், வெட்டிங் ப்ளேனர்ஸ், டெக்கரேட்டர்ஸ், திருமண நிகழ்விற்கு பயன்படும் ஹெலிகாப்டர், லக்சரி கார்கள் தரும் நிறுவனங்கள் , ஆடல் & பாடல் கலைஞர்கள், பந்தல் அமைப்பாளர்கள் போன்ற திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான அம்சங்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வண்ணம் அரங்குகள் அமைக்கபட்டு காட்சிபடுத்தபட்டு இருந்தது.
இது குறித்து கண்காட்சி தலைவர் சாஃப்ட் ஈவெண்ட் செந்தில் மற்றும் துணை தலைவர் ராஜன் ஆகியோர் கூறுகையில், திருமண நிகழ்ச்சியை திட்டமிடுபவர்கள், அலங்காரம் செய்வோர், ஆடை வடிவமைப்பாளர்கள், மலர் அலங்காரம் செய்வோர், திருமண அமைப்பாளர்கள் போட்டோர்கிராபர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் பயனுள்ள,கண்காட்சி என தெரிவித்தனர்.
Leave a Reply