பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை வாயில் வடை சுடுகிறார் என கூறி திமுக சார்பில் மோடி வடை என்ற தலைப்பில் வடை சுட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் திமுக வினர் பிரச்சாரத்திற்கு எதிராக கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக சார்பில் வாழைப்பழ போராட்டம் நடைபெற்றது.
அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முக மூடிக்கு வாழைப்பழத்தை வழங்குவது போன்று நின்று முழக்கங்களை எழுப்பிய பாஜக வினர் திமுக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தற்போது அதனை நிறைவேற்றாமல் வாழைப்பழத்தை கொடுத்து விட்டதாகவும் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை பெருசா வாழைப்பழம் கொடுத்து விட்டான் என கூறும் வழக்கு மொழியை அடிப்படையாக வைத்து இந்த நூதன போரட்டத்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கொண்டு வந்த வாழைப்பழங்களை கட்சியினருக்கே வழங்கிய அவர்கள் மக்கள் சார்பில் நாங்களே இதனை சாப்பிடுகிறோம் எனவும் கூறினர்.
Leave a Reply