கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய தொண்டாமுத்தூர், மருதமலையில், மதுக்கரை போன்ற பகுதிகளில் அடிக்கடி காட்டுயானைகள் ஊருக்குள் வருவதும், விவசாய நிலங்களில் புகுந்து விளை நிலங்களில் சேதப்படுத்துவதும், வாழை மரங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் மூட்டைகளில் இருக்கும் அரிசியினை உட்கொண்டும் வருகிறது.
குறிப்பாக வனத்தை ஒட்டிய விளை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் உணவிற்காக காட்டுயானைகள் வந்து செல்வது வாடிக்கையாகி வருகின்ற நிலையில் அவ்வப்போது மனித – யானை மோதல்களால் உயிர் இழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு வருகிறது. மேலும் வனபகுதியை ஒட்டிய விளை நிலங்கள் மற்றும் கல்லூரிகளுக்குள் காட்டுப் பன்றி, யானைகள் போன்ற வன விலங்குகளின் நடமாட்டமும் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி கூட்டம் கூட்டமாக ஊருக்குள் வந்து செல்லும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply