தாண்டியா நடனமாடி புற்று நோயால் பாதிக்கபட்டோருக்கு நிதி திரட்டிய பெண்கள்.

நாடு முழுவதும் இந்துக்களால் நவராத்திரி பண்டிகை மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையில் ஒன்பது நாட்களும் தாண்டியா நடனம் ஆடி வழிபடுவது வழக்கம். இன்னிலையில் ,கோவையில் ரோட்டரி கிளப் ஆப் காட்டன்சிட்டி ஒருங்கிணைந்து தாண்டிய நடன நிகழ்ச்சியினை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நடத்தியது. 

இதில் கலாச்சார வண்ண உடை அணிந்த வட இந்திய பெண்கள் 800க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் உற்சாகமாக நடனமாடி தாண்டியா நடனமாடி அசத்தினர். பாடலுக்கேற்ற வகையில் சுழனறு சுழன்று நடனமாடிய வட இந்திய பெண்கள் தாண்டியா நடனத்தில் கோலாட்டத்தையும் உற்சாகமாக ஆடி மகிழ்ந்தனர்.  

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு  நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 800க்கும்  மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் கலந்துக்கொண்டு ‘கர்பா மற்றும் தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தனர். வண்ண உடைகள் அணிந்து வடஇந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தாண்டியா நடனம் ஆடியது காண்போரை உற்சாகப்படுத்தியது.

Loading