மூலக்கூறு இனப்பெருக்கவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த பயிலரங்கம்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தின், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையில் மூலக்கூறு இனப்பெருக்கவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம்  நடைபெற்றது. இந்நிகழ்வில் முதுகலை மாணவர்கள், முனைவர் பட்ட மாணவர்கள், முதுகலை ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் என மொத்தம் 20 பேர் பங்கேற்றனர். 

பயிலரங்கை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித்தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர் ந.செந்தில் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மூலக்கூறு இனப்பெருக்கவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் பயிர் மேம்பாட்டில் அதன் பயன்பாடுகள் குறித்து துறைசார் நிபுணர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டன. TASSEL மற்றும் R மென்பொருளை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு செயல்விளக்கவுரை வழங்கப்பட்டது.

Loading