வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சினர் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது, அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு கட்சியை வலுப்படுத்தி வருகின்றனர். இன்னிலையில் கோவையில் மாற்று கட்சியில் இருந்து விலகி சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் இணைத்துகொண்டனர்.
கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் கோவை கரும்புக்கடை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கோவை பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வீரான் ராவுத்தர் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் ராஜாதிராஜா முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் தங்களை பாமகவுடன் இணைத்து கொண்டனர்.
இதனையடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது, மற்றும் கட்சியை வலுப்படுத்துவது குறித்தி ஆலோசனை நடத்தினர். இதில் கோவை தெற்கு மாவட்ட பாமக துணை தலைவர் எம்.எம்.அசரப், துணை செயலாளர் கமல், இளைஞர் சங்க செயலாளர் சாய் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Leave a Reply